ஆடி கிருத்திகை விழா.. திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா நேற்று தொடங்கியது. இன்று ஆடி பரணியை முன்னிட்டு அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலில் குவிந்து இருந்தனர்.அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.
வெளியூர்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் மயில்காவடி, புஷ்பக் காவடி, பன்னீர் காவடிகள் சுமந்தும்.உடலில் வேல், அம்பு அலகு குத்தியும் வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.குழந்தைகள் முதல் முதியவர் வரை பம்பை உடுக்கை முழங்க கிராமியக் கலையோடு ஆடிப் பாடி சென்று முருகனை வழிபட்டனர்.இதனால் மலைக்கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி காட்சி அளித்தது.
ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு மலைக்கோயில், திருக்குளம், மலைப்பாதை, கோபுரம், உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.பக்தர்கள் நெரிசல் இல்லாமல் தரிசனம் செய்வதற்கு கோவில் சார்பாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
ஆடி கிருத்திகை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நாளை மாலை சரவண பொய்கை குளத்தில் தெப்ப திருவிழா நடைபெறும்.மூன்று நாட்கள் தொடர்ந்து தெப்பத்திருவிழா நடைபெற இருக்கின்றது. உற்சவர் வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக