முத்திரையிடாத தராசு பயன்பாட்டால் எடை குறைவு: பொதுமக்கள் ஏமாற்றம்
vபோடி: போடி வாரச்சந்தை, தினசரி மார்க்கெட், சிலமலை வாரச்சந்தையில் முத்திரையிடாத தராசுகளை பயன் படுத்துவதால் பொருட்களின் எடை குறைவாக உள்ளதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.
போடியில் வாரந்தோறும் ஞாயிற்று கிழமை நடக்கும் வாரச்சந்தை, பரமசிவன் கோயில் ரோட்டில் உள்ள தினசரி மார்க்கெட், சிலமலையில் ஞாயிறு தோறும் நடக்கும் வாரச்சந்தையில் ஏராளமான வியாபாரிகள் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இவர்களிடம் பெரும்பாலும் முத்திரை இடப்படாத காலாவதி தராசுகள் உள்ளன.
அவற்றை பயன்படுத்துவதால் எடை குறைவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதற்கு என போடியில் தனி அலுவலகம், அதிகாரிகள் இருந்தும் முத்திரை இடாத தராசுகளை அதிகாரிகள் ஆய்வு செய்வது இல்லை.
முறையாக ஆய்வு செய்து தராசுகளை முத்திரையிட மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.