கோடை சாகுபடிக்கு ஏற்ற விதைகள் தயார்
ஆண்டிபட்டி: கோடை சாகுபடிக்கு ஏற்ற மேம்படுத்தப்பட்ட ரக விதைகளை மானிய விலையில் வாங்கி விவசாயிகள் பயன்பெறுமாறு ஆண்டிப்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: ஆண்டிபட்டி ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகத்தில் அதிக மகசூல் தரும் மேம்படுத்தப்பட்ட கம்பு, உளுந்து, குதிரைவாலி, பருத்தி விதைகள் போதுமான அளவு இருப்பில் உள்ளன. விவசாயிகள் 50 சதவீதம் மானிய விலையில் வாங்கி பயன்பெறலாம்.
மண்புழு வளர்க்கும் ‘சில் பாலிக்’ தொட்டி, மருந்து தெளிப்பான் மற்றும் பண்ணைக்கருவிகள் ஆகியவையும் 50 சத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன.
தேவைப்படும் விவசாயிகள் தங்கள் நிலத்திற்கான ஆவணங்களை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்கி பொருட்களை வாங்கி பயன் பெறலாம் என்றார்.