அங்கன்வாடி குழந்தைகளை தயார்படுத்தும் உபகரணங்கள்
தேனி:அங்கன்வாடிகளில் பயிலும் குழந்தைகளை முன்பருவ கல்விக்கு தயார் செய்யும் நோக்கத்தில் 8 வகை உபகரணங்களை மையங்களுக்கு வழங்கி, செயல்முறை கற்பித்தல் பணியை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் 5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கற்பித்தல் பணி நடக்கிறது. இவர்களை முன் பருவ கல்விக்கு தயார்படுத்தும் நோக்கத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறையின் (ஐ.சி.டி.எஸ்.,) சார்பில் ‘டிஜிட்டல் சிலேட்’, மியூசிக்கல் சேர் உள்ளிட்ட 9 உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘செயல்முறை கல்வியை குழந்தைகளுக்கு கற்பிக்கும் போது வளர்சிதை மாற்றத்துடன் கூடிய பாடத்திட்டத்திற்கான புரிதல் ஏற்படுகிறது. முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள முன் பருவ கல்விக்கு உடல்திறனும், மனத்திறனும் மேம்படுவதால் செயல்முறை வடிவ கற்றல் பணிகளுக்கான உபகரணங்கள் மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது, என்றனர்.