கல்லுாரியில் கருத்தரங்கம்
தேனி : உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லுாரியில் ஆளுமைத்திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கம், சிங்காரவேலர் விருது பெற்ற எழுத்தாளர் சுப்பிரமணிக்கு பாராட்டு விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் ஹாஜி முகமதுமீரான் தலைமை வகித்தார். அனைவரையும் தமிழ்த்துறை தலைவர் முருகன் வரவேற்றார்.
இந்தியாவின் தலைசிறந்த ஆளுமைகள் என்ற தலைப்பில் பேச்சாளர் பாரதன் பேசினார்.
மாநில அரசின் சிங்காரவேலர் விருது பெற்ற எழுத்தாளர் தேனி சுப்பிரமணிக்கு கல்லுாரி சார்பில் மரியாதை செலுத்தி பாராட்டினர்.
தமிழ்த்துறை பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் விழாவில் பங்கேற்றனர்.