வேன் மோதி வியாபாரி காயம்
பெரியகுளம்: பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார் 29. தேங்காய் வியாபாரி. நல்லகருப்பன்பட்டியில் தென்னந்தோப்பிற்கு டூவீலரில் சென்று விட்டு, அவருடன் வேலை செய்யும் சத்தியகலா என்பவரை பின்னால் உட்கார வைத்து பெரியகுளம் நோக்கி சென்றார்.
எ.புதுப்பட்டி அருகே எதிரே வந்த வேன் மோதியது. இதில் காயமடைந்த நந்தகுமார், மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சத்தியகலாவிற்கு காயம் இல்லை.
விபத்து ஏற்படுத்திய போடி சோலை சொக்கலிங்கம் நகரைச் சேர்ந்த பூவலிங்கராஜாவிடம் 37, வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.–