லாரி விபத்தில் டிரைவர் பலி
பழநி, பிப். 25: ராமநாதபுரம் மாவட்டம், மரைக்காயர்பட்டினத்தை சேர்ந்தவர் வினோத் கண்ணா (42). டிரைவர். இவர், லாரியில் தென்னை நார் லோடு ஏற்றி கொண்டு உடுமலைக்கு புறப்பட்டு வந்தார். பழநி அருகே உடுமலை நான்கு வழிச்சாலையில் தாளையம் பகுதியில் நேற்று காலை 5 மணியளவில் லாரி சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் பழுதாகி நின்றிருந்த மற்றொரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது
இதில் வினோத் கண்ணா இடிபாடுகளில் சிக்கி கொண்டார்.இது குறித்து தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு வாகன ஓட்டிகள் தகவல் கொடுத்தனர். பழநி தீயணைப்பு நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கிய வினோத் கண்ணாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.