மாநில குங்பூ போட்டியில் போடி மாணவர்கள் சாதனை
மாநில குங்பூ போட்டியில் போடி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.
தமிழ்நாடு குங்பூ அசோசியேசன் சார்பில் மாநில அளவிலான குங்பூ போட்டி திருப்பூரில் நடந்தது. இதில் போடி நீலமேகம் பிள்ளை அகடாமி மாணவ, மாணவிகள் 400 கலந்து கொண்டனர். 13 வயதுக்கு உட்பட்ட சப் ஜூனியர் பெண்கள் பிரிவு போட்டியில் போடி ஜா.க.நி.,மேல்நிலைப்பள்ளி மாணவி சக்தி ஸ்ரீ முதலிடம் பெற்று தங்கமும், யாழினி 3ம் இடம் பெற்று வெண்கல பதக்கம் பெற்றனர். 11 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தேனி வேலம்மாள் போதி காம்பஸ் பள்ளி மாணவி லக்சிதா முதலிடம் பெற்று தங்கமும், லிட்டில் கிங்டம் பள்ளி மாணவி தேஜா ஸ்ரீ, திருமலாபுரம் காமராஜர் மெட்ரிக் பள்ளி மாணவி பிரகதிசா 2 ம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் பெற்றனர். 8 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் போடி சிசம் சி.பி.எஸ்.சி., பள்ளி மாணவி ரேணா 3 ம் இடம் பெற்று வெண்கலமும் பெற்றுள்ளனர்.