மிளகு சாகுபடி பயிற்சி
பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி,ஆராய்ச்சி நிலையத்தில், வாசனை மற்றும் மலைத்தோட்டப்பயிர்கள் துறை, மத்திய அரசின் பாக்கு மற்றும் கேரளா கோழிக்கோடு வாசனைப் பயிர்கள் சமம்பாட்டு இயக்கம் இணைந்து மிளகு சாகுபடி பயிற்சி நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜாங்கம் தலைமை வகித்தார்.
புதிய பயிர் ரகங்கள், வீரிய ஒட்டு செடிகள் மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள் முறையாக கடைபிடித்தல், மிளகின் பயன்பாடு, ஏற்றுமதி, மதிப்பு கூட்டுதல் ஆகியவை விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.-