Saturday, May 3, 2025
தமிழக செய்திகள்

எதிர்க்கட்சி கூட்டணியை ஒரு கை பார்ப்போம்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

”நம்மை எதிர்க்க கூடியவர்கள், எந்த நிலையில் வந்தாலும் சரி, எப்படி கூட்டணி வைத்து கொண்டு வந்தாலும் சரி, ஒரு கை பார்ப்போம்” என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த காலங்களில் ஊர்ந்து கொண்டிருந்த தமிழகம் இன்று கம்பீரமாக நடந்து செல்கிறது. இதை நான் சட்டசபையில் பேசும் பொழுது அப்படியே கடந்து சென்று இருக்கலாம் ஆனால் அவர்கள் தானாக வந்து சிக்கிக் கொண்டார். எதிர்க்கட்சி துணை தலைவர் ஊர்ந்து என்று சொல்ல வேண்டாம் என்றார். நான் தவழ்ந்து என போட்டுக்கொள்ளுமாறு கூறினேன்.

தற்போது, தவழ்ந்து, தவழ்ந்து முதல்வர் ஆகினேன் என பழனிசாமி கூறி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகிற்கு வழிகாட்டும் அளவிற்கு சிறப்பான ஆட்சியை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். நாங்கள் நிச்சயமாக உறுதியாக, நம்மை எதிர்க்க கூடியவர்கள், எந்த நிலையில் வந்தாலும் சரி, எப்படி கூட்டணி வைத்து கொண்டு வந்தாலும் சரி, ஒரு கை பார்ப்போம் என்ற உணர்வோடு தான் தங்களது கடமைகளை ஆற்றி கொண்டு இருக்கிறோம்.

எதையும் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 200 தொகுதி என்ன 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அது, வருமான வரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத் துறை ஆக இருந்தாலும் கவலையில்லை. நாம் நெருக்கடியை பார்த்து வளர்ந்துள்ளோம். நீங்கள் நெருக்கடியை ஆதரிக்க வேண்டாம். எதிர்க்காமல் இருக்க வேண்டும். தி.மு.க.,வின் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். 7வது முறையாக தி.மு.க., ஆட்சி அமையும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *