Wednesday, May 14, 2025
உலகம்

ரூ.3,400 கோடி சொகுசு விமானம்; டிரம்பிற்கு கத்தார் அரசு பரிசு

அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கு ஆசிய நாடுகளுக்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாடாக நேற்று சவுதிக்கு சென்றார். இன்று சவுதியின் ரியாத்தில் நடக்கும் வளைகுடா ஒத்துழைப்பு மன்ற உச்சி மாநாட்டில், ஈரானின் அணுசக்தி திட்டம், காசா போர் மற்றும் சவுதி – இஸ்ரேல் உறவு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், கத்தார் மன்னர் குடும்பம், அதிபர் டிரம்புக்கு 3,400 கோடி ரூபாய் மதிப்பிலான ‘போயிங் 747-8’ என்ற ஆடம்பர விமானத்தை பரிசாக வழங்க முன் வந்துள்ளது. இதற்கு, அமெரிக்க எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த சிலரே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அவர் அளித்த பதிலில், ”இந்த மாதிரியான பரிசை நான் ஒருபோதும் நிராகரிக்க மாட்டேன். இதை மறுப்பதற்கு நான் முட்டாள் இல்லை. தற்காலிக ‘ஏர் போர்ஸ் ஒன்’ விமானமாக இது செயல்படும். என் பதவிக்காலத்துக்கு பின் அதிபர் அருங்காட்சியகத்துக்கு நன்கொடையாக வழங்குவேன்,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *