தேனி நீட் தேர்வு ஆள் மாறாட்டம் மோசடி…. தரவுகளை தராத தகுதி தேர்வு முகமை…ஐகோர்ட்டில் சிபிசிஐடி தகவல்..நீதிபதி கண்டனம்.
கடந்த 2019 ல் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த உதித்சூர்யா மாணவன் தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் MBBS படித்து வந்தார். இது சம்பந்தமான வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விசாரணையில் உதித்சூர்யா சென்னையில் தேர்வு எழுதியுள்ளார்.அவரே ஆள் மாறாட்டம் செய்து மும்பையிலும் எழுதி உள்ளார். மும்பையில் எழுதிய மதிப்பெண் அடிப்படையில் அவர் தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளார்.அந்த வழக்கில் ப்ரோக்கர் ஆக செயல்பட்ட தருண்மோகன் என்பவர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது. மேற்படி வழக்கில் தன்னை விடுவிக்ககோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
மேற்படி வழக்கில் விசாரணையில் உதித்சூர்யா இரண்டு இடங்களிலும் எழுதியது சம்பந்தமாக தகவல் உறுதியாக உள்ளதாகவும்,மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது இப்ரான் மாணவர்க்காக ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்வு சில மாணவர்கள் தேர்வு எழுதியதாகவும், ஆனால் முகமது இப்ரான் மொரிசியஸ் தீவில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது சிபிசிஐடி . அது சம்பந்தமான தேர்வு நடைபெற்ற கண்காணிப்பு கேமரா பதிவு,கைரேகை பதிவு மற்றும் ஆவணங்களை கேட்பதாகவும்,அதை NTA தர மறுக்கிறது என ஐகோர்ட்டில் சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு நீதிபதிகள் NTA மீது கடுமையான அதிர்ப்தியை பதிவு செய்துள்ளது.
கம்மல் முதல் தாலி வரை கழட்ட சொன்ன NTA தற்போது அதன் மீது இருக்கும் விமர்சனங்கள் நூறு சதவீதம் அதன் நம்பகத்தன்மையை இழந்து விட்டது. அதன் அதிகாரிகளை கைது செய்து விசாரித்தால் தான் அதன் உண்மை தன்மை வெளியே வரும்.