மாவட்ட அளவிலான செஸ் போட்டி
தேனியில் மாவட்ட அளவில் நடந்த செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், சிறந்த பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப் பட்டன.
தேனி கிராண்ட் மாஸ்டர் அகாடமி சார்பில் சர்வதேச செஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான செஸ் போட்டி தனியார் ஓட்டலில் நடந்தது. போட்டிகளை தேனி டி.எஸ்.பி., பார்த்திபன் துவக்கி வைத்தார். விழாவில் அகாடமி பொருளாளர் கணேஷ்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குபேந்திரன் முன்னிலை வகித்தனர். போட்டிகள் 8, 10, 12, 15 வயதிற்கு உட்பட்டோர் பிரிவுகளில் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஓய்வு பெற்ற வனசரகர் அமனுல்லா, டாக்டர்கள் அறவாழி, பிரபாகரன், சரவணன், லயன்ஸ் கிளப் சாய்வெங்கடேசன், வீரராஜ் முருகன் பரிசு வழங்கினர். சிறந்த பள்ளிகளுக்கான விருது கொடுவிலார்பட்டி தேனி கம்மவார் சங்கம் பப்ளிக் பள்ளி, லட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ரேணுகா வித்யாலயா பள்ளி, கே.லட்சுமிபுரம் அரசு தொடக்கப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி நாடார் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி லிட்டில் கிங்டம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. போட்டியை அகாடமி தலைவர் சையது மைதீன் ஒருங்கிணைத்தார். ஏற்பாடுகளை அகாடமி இயக்குனர் அஜ்மல்கான் செய்திருந்தார்.