மாவூற்று வேலப்பர் கோயிலில் கார்த்திகை வழிபாட்டு விழா
தெப்பம்பட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோவிலில் கார்த்திகை வழிபாட்டு விழா நடந்தது
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இக்கோயிலில் மாதாந்திர கார்த்திகை, அமாவாசை நாட்களில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர்.
மருத மரங்களின் வேர்ப் பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனை நீரில் குளித்து வேலைப்பரை வழிபடுவதால் தங்களின் தீராத வினைகள் தீரும் என்பதை நம்பிக்கையாக கொண்டுள்ளனர். மாதாந்திர கார்த்திகையான நேற்று சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பக்தர்கள் சார்பில் வேலப்பருக்கு 21 வகையான அபிஷேகங்கள், சந்தன காப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர். பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேலப்பரை வழிபட்டு சென்றனர். பக்தர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.