Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

ஒலிம்பிக் போட்டி: இந்திய, தமிழக வீரர், வீராங்கணைகளுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது; “பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் துவங்கியுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்-வீராங்கனைகள், குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜேஷ் ரமேஷ், ஸ்ரீராம் பாலாஜி, சந்தோஷ் குமார், சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ், பிரவீன் சித்திரவேல், விஷ்ணு சரவணன், நேத்ரா குமணன், பிரித்விராஜ் தொண்டைமான், இளவேனில் வாளரிவன், சரத் கமல் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தடகள உலகின் ஆகச்சிறந்த மேடையில் சிறப்பாக விளையாடி, பதக்கங்களைக் குவித்து, நாட்டிற்கு பெருமைசேர்க்க வாழ்த்துகிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *