சென்னை குடியரசு தின அணி வகுப்பில் பங்கேற்ற தேனி மாணவர்களுக்கு பாராட்டு
தேனி: சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் அணிவகுப்பில் பங்கேற்ற தேனி மாவட்ட என்.எஸ்.எஸ்., திட்ட தன்னார்வ 5பேரை கலெக்டர் ஷஜீவனா, சி.இ.ஓ., இந்திராணி பாராட்டினர்.
என்.எஸ்.எஸ்., திட்ட சிறப்பு முகாம்களில் சிறந்த சேவையாற்றும் மாணவர்களை குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க, சி.இ.ஓ., தலைமையிலான குழு தேர்வு செய்தது.
இதில் ராயப்பன்பட்டி சவரியப்ப உடையார் நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவர் சபரீஸ்வரன், போடி ஜமீன்தாரணி காமுத்தாயம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவர் சிவராமன், திருமலாபுரம் நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர் ருத்ரபிரதாப்,மேலச்சிந்தலைச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் சக்தீஸ்வரன், ஆண்டிபட்டி ஆண்கள் அரசுமேல்நிலைப்பள்ளி மாணவர் சஞ்சய் ஆகிய ஐந்து பேர் தேர்வாகினர்.
இவர்களுக்கு ஜன.17 முதல் 25 வரை சென்னையில் சிறப்பு அணிவகுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஜன.26ல் கவர்னர் ரவி பங்கேற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் இம்மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இவர்களுக்கும்திட்ட அலுவலர் ராஜேஷ் ஆகியோருக்கு இளைஞர் நலன் – விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாநில என்.எஸ்.எஸ்., அலகு, கல்லுாரி கல்வி இயக்குனரகம் இணைந்து பாராட்டு சான்றிதழ்கள், கேடயங்களை வழங்கி கவரவித்தது.
தேனி திரும்பிய மாணவர்களை கலெக்டர், சி.இ.ஓ., மாவட்ட என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் நேருராஜன், மாநில திட்ட அலுவலர் குணாநிதி, பள்ளி திட்டஅலுவலர்கள் கருப்பையா, முருகேசன் பராட்டினர். மாவட்ட திட்ட அலுவலர் கூறுகையில், 2022க்கு பின் முதல் முறையாக தேனி மாவட்டத்தில் இருந்து 5 மாணவர்கள் சென்னை குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றுள்ளது முதல்முறையாகும்.
இந்த மாணவர்களுக்கு அரசு பணியின் போது 5 மதிப்பெண் முன்னுரிமை கிடைக்கும் என்றார்.