கல்லாறு காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய பெண் டோலி கட்டி மீட்பு
கல்லாற்று காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தோட்டத்தில் தங்கியவர்கள் 4 நாட்களுக்கு பின் வெள்ளப்பெருக்கு குறைந்த நிலையில் உடல்நலம் பலகீனமான மாரியம்மாள் ‘டோலி’ கட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா வெள்ளகெவி ஊராட்சி சின்னூர், கும்பாம்பாறை விவசாய தொழிலாளர்கள் 7 பேர் ஆக.,15ல் கல்லாற்றை தாண்டி விவசாய பணிக்குச் சென்றனர்.
அன்றைய தினம் மாலை வீடு திரும்பும் போது, பெரியகுளம் அருகே கல்லாற்றில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இவர்களை மீட்க பெரியகுளம் தீயணைப்புத் துறையினர் சென்றனர்.
போதிய வெளிச்சம் இல்லாததால் தொழிலாளர்கள் தோட்டத்தில் தங்கினர்.
இந்நிலையில் நேற்று வெள்ளப்பெருக்கு குறைந்து. அங்கு 4 நாட்கள் குளிரில் தங்கியிருந்த மாரியம்மாள் 45. காய்ச்சல், உடம்பு வலியால் அவதிப்பட்டார். அவரால் நடக்க முடியவில்லை. அவருடன் தங்கியிருந்தவர்கள் டோலி கட்டி கல்லாற்றை தாண்டி கல்லாற்று கரைக்கு கொண்டு வந்தனர். பின் அவர் ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, முதலுதவி அளித்தனர். பின், மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.