Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செடி, கொடிகள் அகற்றம்

கூடலுார் : கூடலுார் லோயர்கேம்ப் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வளர்ந்திருந்த செடி கொடிகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

கூடலுாரில் இருந்து லோயர்கேம்ப் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இரு பகுதிகளிலும் செடி கொடிகள் அடர்ந்து வளர்ந்திருந்தன. தடுப்புக் கம்பிகளையும் கடந்து ரோடு வரை வளர்ந்திருந்ததால் டூவீலரில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்தது. இதனைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் செடி கொடிகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

சபரிமலை சீசன் காரணமாக தற்போது ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் வந்த வண்ணம் உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த செடி கொடிகளை சபரிமலை சீசன் துவங்குவதற்கு முன்பு அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

ஆனால் சீசன் மும்முரமாக இருக்கும் நேரத்தில் இப் பணி நடப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *