ஆவணி அவிட்டம் நாளில் பூணுால் அணியும் விழா
மாவட்டத்தில் ஆவணி அவிட்டம் திருநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பூணுால் அணியும் திருச்சடங்கு நடந்தது.
தேனி அல்லிநகரம் அக்ரஹாரம் ஆஞ்சநேயர் கோயிலில் ஆவணி அவிட்டம் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் பூணுால் அணியும் திருச்சடங்கு நடந்தது.
சங்க உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சத்யநாராயண பூஜையில் பக்தர்கள் பங்கேற்றனர்.
வீரபாண்டி கண்ணீஸ்வர முடையார் கோயில் வளாகம், தேனி பெத்தாட்சி விநாயகர் கோயில் ஆவணி அவிட்டம் திருநாளை முன்னிட்டு பூணுால் அணியும் திருச்சடங்கு நடந்தது.
பெரியகுளம்
பெரியகுளம் தெற்கு அக்ரஹாரம் சிருங்கேரி ஜகத்குரு ப்ரவசன மந்திரத்தில் பூணூல் அணியும் விழா நடந்தது. ராமநாதன் சாஸ்திரிகள் முன்னிலையில் ஏராளமானோர் பூணூல் அணிந்தனர்.
ஏற்பாடுகளை பிராமணர் சங்க தலைவர் வைத்தியநாதன், செயலாளர் ராம்சங்கர், பொருளாளர் கார்த்திகேயன், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
பெரியகுளம் தென்கரை வணிக வைசியகுல அபிவிருத்தி சங்கத்தில் பூணூல் அணியும் விழா நடந்தது. ஏற்பாடுகளை தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் மணிவண்ணன், அலுவலர் சரவணக்குமார், உறுப்பினர்கள் செய்திருந்தனர். ஏராளமானோர் பூணூல் திருச்சடங்கில் பங்கேற்று பூணுால் அணிந்தனர்.
பெரியகுளம் தென்கரை விஸ்வகுல மகாஜன சங்கத்தினர் சிதம்பர தீர்த்தம் விநாயகர் கோயில் மண்டபத்தில் பூணூல் அணியும் விழா நடந்தது.
வணிகவரித்துறை (ஓய்வு) துணை அலுவலர் முருகதாஸ் தலைமையில் நடந்தது. ஏற்பாடுகளை தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் சேதுராமன், உறுப்பினர்கள் செய்திருந்தனர். ஏராளமானோர் பூணூல் அணிந்தனர்.