எம்.எஸ்.எம்.இ., கவுன்சில் மாவட்டத் தலைவர் நியமனம்
தேனி அரண்மனைப்புதுாரில் எம்.எம். பல் மருத்துவமனையின் இயக்குனராக டாக்டர் பாஸ்கர் உள்ளார். இவரை இந்திய குறு சிறு நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு கவுன்சிலின் தேனி மாவட்ட தலைவராக நியமித்து, தேசிய தலைவர் ஸ்ரீபிரதீப் மிஷ்ரா உத்தரவிட்டுள்ளார்.
டாக்டர் பாஸ்கருக்கு தேனி மாவட்ட தொழில் உரிமையாளர்கள், மாவட்ட கவுன்சில் உறுப்பினர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.