மூணாறில் போலீஸ் ஸ்டேஷன் அருகில் வந்த காட்டு யானைகள்
மூணாறு நகரில் நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் ஸ்டேஷன் அருகில் வந்த காட்டு யானைகளை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆகியோர் பார்த்து மகிழ்ந்தனர்.
பழைய மூணாறில் ஒர்க் ஷாப் கிளப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இரவில் இரண்டு காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்தன. அவை அப்பகுதியில் உள்ள மலையை கடந்து நேற்று பகலில் மூணாறு போலீஸ் ஸ்டேஷன் அருகே மலையில் முகாமிட்டன. தற்போது மழை பெய்வதால் மலையில் புல் நன்கு வளர்ந்துள்ளன.
அதனை தின்றவாறு வெகு நேரம் யானைகள் காணப்பட்டன. நீண்ட இடைவெளிக்கு பிறகு நகரில் போலீஸ் ஸ்டேஷன் அருகே யானைகள் வந்ததால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆகியோர் பார்த்து மகிழ்ந்தனர்.