புறவழிச் சாலையில் குவியும் குப்பை
கூடலுார் மந்தை வாய்க்காலில் இருந்து வடக்கு போலீஸ் ஸ்டேஷன் வரை 2 கி.மீ., தூரத்திற்கு புறவழிச்சாலை உள்ளது.
கூடலுாரில் சேகரமாகும் குப்பை நகராட்சி சார்பில் சேகரிக்கப்பட்டு பெத்துகுளத்திலும், குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் யூனிட் பகுதியிலும் கொட்டப்படுகிறது.
இருந்த போதிலும் ஏராளமான குப்பையை புறவழிச்சாலையில் கொட்டிச் செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் கேரளாவில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் புறவழிச்சாலை பகுதியில் குப்பையை கொட்டுகின்றனர்.
அவ்வப்போது நகராட்சி சார்பில் குப்பையை அகற்றும் பணி நடக்கிறது.
இருந்தபோதிலும் தொடர்ந்து கொட்டுவதால் சுதாகரக் கேடு ஏற்பட்டுள்ளது. இதனை முழுமையாக தடுக்க நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.