மாநில அட்யா பட்யா போட்டி தங்கம் வென்ற தேனி அணி
மாநில அளவிலான அட்யா பட்யா விளையாட்டு போட்டியில் தேனி மாவட்ட அணி தங்கம் வென்றது.
மாநில அளவிலான 18 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் அட்யா பட்யா போட்டிகள் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் பொறியியல் கல்லூரியில் அக்.,18 முதல் 20 வரை நடந்தது.
மாநிலத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருவள்ளூர், திருநெல்வேலி உட்பட 20 மாவட்டங்களில் இருந்து ஏராளமான வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் இறுதிப்போட்டியில் தேனி மாவட்ட ஆண்கள் அணியும், திருவள்ளூர் மாவட்ட ஆண்கள் அணியும் மோதியது. இதில் 16-:18,15-:16 என்ற நேர் செட் கணக்கில் தேனி மாவட்ட அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றனர். சிறந்த வீரருக்கான பரிசினை தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுதர்சன் பெற்றார்.
முன்னதாக இந்த அணி சப்-ஜூனியர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. அரை இறுதிப்போட்டியில்
தேனி மாவட்ட பெண்கள் அணியினர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
இவர்களுக்கு முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், இசக்கி சுப்பையா கோப்பையை வழங்கினர். வெற்றி பெற்றவர்களை அட்யா பட்யா தேனி மாவட்ட செயலாளர் பயிற்சியாளர் முத்துக்குமரன், பெண்கள் அணி பயிற்சியாளர் தனலட்சுமி, மாவட்ட தலைவர் செல்வக்குமார் பாண்டியன் பாராட்டினர். முதலிடம் பிடித்தவர்கள் நவ.7 ஈரோட்டில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில் விளையாட உள்ளனர்.