விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சின்னமனூரில் நடைபெற்றது
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜிவனா தலைமையில் நடைபெற்றது
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் என்ற திட்டத்தின் கீழ் மண்புழு வளர்க்கும் முறையாக 400 உர படுக்கை அமைக்கப்பட்டுள்ளது
இதில் ஒரு கிலோ மண்புழு உரப் படுக்கையில் வளர்ப்பதற்கு விட்டால் சிறிது நாட்களில் 3 கிலோ ஆக அதிகரித்து விடும் இதனால் விவசாயத்திற்கு மிக வளர்ச்சியாக இருக்கும் என சின்ன கண்ணு வேளாண்மை துணை இயக்குனர் உரையாற்றினார்
இந்நிகழ்வில் விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் மனுக்கள் பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளபட்டது ஏராளமான விவசாயிகள் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர்