விவசாயிகள் உழவன் செயலியில் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
தேனி, : வேளாண் கருவிகள் வாடகைக்கு தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலியில் விண்ணப்பிக்குமாறு துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளன
வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாய பயன்பாட்டிற்காக மண் அள்ளும் இயந்திரம், டிராக்டர் உள்ளிட்டவை வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதனை தேவைப்படும் விவசாயிகள் பதிவு செய்து பயன்படுத்தலாம். துறை அதிகாரிகள் கூறியதாவது: வேளாண் பணிகளுக்காக துறை சார்பில் குறைந்த வாடகைக்கு இயந்திரங்கள், கருவிகள் வழங்கப்படுகின்றன. வாடகையாக ஒரு மணி நேரத்திற்கு மண் அள்ளும் இயந்திரம் (மூன்று வகை) ரூ.890, ரூ.1230, ரூ.1910, டிராக்டர் ரூ.500, அறுவடை இயந்திரங்கள் (2 வகை) ரூ.1160, ரூ.1880, கரும்பு அறுவடை இயந்திரம் ரூ.5120, வாகனத்துடன் தேங்காய் பறிக்கும் இயந்திரம் ரூ.450க்கு வழங்கப்படுகிறது. நில நீர் ஆய்வுக் கருவி உள்ளிட்டவை வாடகைக்கு வழங்கப்படுகின்றன.
தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு தேனி, உத்தமபாளையம் கோட்ட வேளாண் உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களை அணுகலாம்., என்றனர்.