தேனி ராஜ வாய்க் காலில் சென்ற மழைநீர்
தேனி: தேனியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக ஆக்கிரமிப்புகள் அகற்றி ராஜவாய்க்கால் துார்வாரப்பட்டது.
ராஜாவாய்க்கால் மூல வரைபடத்தில் உள்ளது போல் ஆக்கிரமிப்புகள் இன்னும் அகற்றப்பட வேண்டும் என கோரிக்கை உள்ளது.
நீர்வளத்துறையினர் அது குறித்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.இந்நிலையில் நேற்று பெய்த கனமழையால் கம்பம் ரோடு பள்ளிவாசல் பின்புறம் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட், டி.எஸ்.பி., ஆபீஸ் வரை சென்ற மழைநீர் அப்பகுதியில் 3 இடங்களில் தேங்கியது.
நீரின் போக்கு குறைந்து வாய்க்கால் வழியாக ராஜாக்குளத்திற்கு சென்றது.
வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக எடுத்து, கரைகளை பலத்தப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.