Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தேனி, பிப். 21: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம் இதன்படி இம்மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் இன்று (21-ந்தேதி) மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜித் சிங் தலைமையில் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களுக்கான குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *