போடி அருகே வெவ்வேறு பகுதியில் 2 இளம் பெண்கள் மாயம்
போடி, டிச. 16: தேனி மாவட்டம் போடி அருகே, ராசிங்கபுரம்-தேவாரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் குமார்(42). இவர் கேரளாவில் ஏலத்தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நாகஜோதி(36). இவர்களுக்கு கவின்குமார், சிவஸ்ரீ ஆகிய குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்ற நாகஜோதி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலையத்தில் குமார் புகார் செய்தார்.
போடி அருகே மீனாட்சிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பொட்டல்களம் வினோபாஜி தெருவை சேர்ந்தவர் பிச்சைமணி (33). இவரது மனைவி பானுமதி (27) செங்கல் காளவாசலில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன் தினம் இரவு அனைவரும் தூங்கச் சென்றனர். காலையில் எழுந்து பார்த்த போது பானுமதி வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலையத்தில் பிச்சைமணி புகார் கொடுத்தார். எஸ்ஐ விஜய் மற்றும் போலீசார் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து 2 இளம்பெண்களையும் தேடி வருகின்றனர்.