சிறுமிக்கு திருமணம் 3 பேர் மீது வழக்கு
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் மலர்கொடி சிறுமி திருமணம் குறித்து தனக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து மூலக்கடை பகுதியில் விசாரணை மேற்கொண்டார்.
அங்கு 15 வயதான சிறுமிக்கு திருமணம் முடிந்து 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மலர்க்கொடி புகாரில் சிறுமி திருமணத்திற்கு உடந்தையாக இருந்த கணவர் பாரதி, சிறுமியின் பெற்றோர் மகேந்திரன், வித்தியா ஆகியோர் மீது கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.