வரி செலுத்தாத குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
கூடலுார் : கூடலுார் நகராட்சியில் வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் வசூலிப்பதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வீடுகளிலும் வரி பாக்கி உள்ள விபரங்கள் அடங்கிய நோட்டீஸ் சமீபத்தில் வழங்கப்பட்டது.
மேலும் வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடப்பட்டது. இருந்த போதிலும் பல மாதங்களாக குடிநீர் மற்றும் வீட்டு வரி செலுத்தாதவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு நேற்று கமிஷனர் கோபிநாத் தலைமையில் அதிகாரிகள் 10க்கும் மேற்பட்ட வரிபாக்கியுள்ளவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பை துண்டித்து நடவடிக்கை எடுத்தனர்.