ஊராட்சி இடத்தில் குடிசை ஆக்கிரமிப்புக்கள் அகற்றம்
பெரியகுளம்: தேவதானப்பட்டி அருகே டி.வாடிப்பட்டி பகுதியில் பஞ்சமி நிலம் என கம்பு, தார்பாய் அமைத்து 35 ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறை, போலீசாருடன் இணைந்து அகற்றினர்.
பெரியகுளம் ஒன்றியம் டி.வாடிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு ஏக்கர் நிலம் தேவதானப்பட்டி பைபாஸ் ரோடு அருகே உள்ளது.
இதில் சில்வார்பட்டி தெற்கு காலனி, தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த சிலர் ‘பஞ்சமி’ இடம் என குடியேறுவதற்காக குடிசை அமைக்கும் பணிக்காக நேற்று முன்தினம் கம்புகள் ஊன்றி, தார்பாய் தொங்கவிட்டனர்.
இந்த இடம் டி.வாடிப்பட்டி ஊராட்சிக்கு கவர்னர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று தாசில்தார் மருதுபாண்டி, தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் அப்துல்ஹா மற்றும் போலீசார் 35 ஆக்கிரமிப்பு கட்டைகள், தார்பாய்களை அகற்றினர்.