சளி, இருமல் அதிகரிப்பால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட்டம்
கம்பம்: காய்ச்சல் குறைந்து, சளி, இருமல் அதிகரித்திருப்பதல், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது.
கடந்த சில வாரங்களாக பெய்த மழை ஓய்ந்து பனிப் பொழிவு ஆரம்பித்துள்ளது. சீதோஷ்ணை நிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் பரவியது. காய்ச்சலும் விட்டு விட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் பாதிப்பு குறைந்தது. ஆனால் அதற்கு பதிலாக சளி மற்றும் இருமல் அதிகரித்துள்ளது. ஒரு சிலருக்கு தொடர் இருமல் உள்ளது. சளி, இருமல் காரணமாக அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கூட்டம் குவிந்து வருகிறது. சளி,இருமலை கட்டுப்படுத்தும் மருந்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருந்தாளுனர்கள் கூறுகையில், பனிப் பொழிவு ஆரம்பமாகி இருப்பதால் சளி இருமல் பாதிப்பு அதிகமாக உள்ளது. மருந்து மாத்திரைகள் இருப்பு குறைந்து விட்டது. மருந்து வழங்க கேட்டுள்ளோம். விரையில் கொள்முதலுக்கு அனுமதி கிடைக்கும். இருப்பில் உள்ள மருந்து மாத்திரைகளை வைத்து சமாளித்து வருகிறோம் என்றனர்.