மாவட்டத்தில் ஊர்காவல் படைக்கு விண்ணப்பிக்கலாம்
தேனி: மாவட்டத்தில் ஊர்காவல் படையில் காலியாக உள்ள ஆண்கள் 29, பெண்கள் 3 உட்பட, தற்போது ஏற்பட உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடக்க உள்ளது.
விருப்பமுள்ள 10ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வியடைந்த 20 வயது நிறைவடைந்தவர்கள் டிச.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் தேனி எஸ்.பி., அலுவலகம் அருகே உள்ள தேனி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை நேரில் அல்லது தபாலில் வழங்கலாம்.
தேர்வானவர்களுக்கு 45 நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்படும். மாதத்திற்கு 5 நாட்கள் பணி வழங்கப்படும். ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.560 வழங்கப்படும் என, எஸ்.பி., சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வட்டார தளபதி, மாவட்ட ஊர்காவல்படை அலுவலகம், தேனி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன், முதல் தளம், தேனி 625 531 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.