தேனியில் நாம் தமிழர் மறியல் : 48 பேர் கைது
தேனி : அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், சென்னையில் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்ததை கண்டித்து தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். மண்டலச் செயலாளர் பிரேம்சந்தர் முன்னிலை வகித்தார். தொகுதி பொறுப்பாளர் மாரிமுத்து, சுரேஷ்குமார், ஜெயக்குமார்,குமரேசன் உள்ளிட்டோர் பபங்கேற்றனர்.
பின் தி.மு.க., அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டிருந்த நிலையில் திடீரென நேருசிலை அருகே மறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலை கைவிடவில்லை. கிழக்கு மாவட்டச் செயலாளர் உட்பட 48 பேரை கைது செய்தனர்.