தேனி ராஜவாய் க்காலில் பாலம் அகலப்படுத்தும் பணி; மார்ச் இறுதிக்குள் முடிக்க திட்டம்
தேனி; தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ராஜவாயக்காலில் அமைந்துள்ள பாலத்தை அகலப்படுத்தும் பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் துவங்கி உள்ளனர். இப்பணி மார்ச் இறுதிக்குள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்
தேனி நகர் பகுதியில் 2.47 கி.மீ., துாரத்திற்கு ராஜவாய்க்கால் அமைந்துள்ளது.
அகலத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ராஜவாய்க்கால் சீரமைக்கும் பணி துவங்கி உள்ளது.
இதனால் பாலத்தை 3மீ., ல் இருந்து 4 மீ., அகலமாக மாற்றும் பணி நேற்று துவங்கியது. இதற்காக பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்ப்பட்டு, சென்டர் மீடியன்கள் இடித்து அகற்றப்பட்டன. அவ்வப்போது போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குநர் ரம்யா கூறுகையில், ‘ராஜவாய்க்காலில் தண்ணீர் தேங்காமல் செல்வதற்காக பாலம் அகலப்படுத்தும் பணி துவங்கி உள்ளது. ரோட்டினை இரு பகுதியாக பிரித்து பணிகள் நடக்க உள்ளது. மார்ச் இறுதிக்குள் பணிகள்நிறைவடையும்’, என்றார்.