Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

இலவச திருமணத்திற்கு விண்ணப்பிக்கலாம்

தேனி; ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருமண ஜோடிகளுக்கு இலவச திருமண திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் பிப்.,14ல் 20 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தப்பட உள்ளது.

விருப்பமுள்ளவர்கள் கோயில் அலுவலகத்தில் ஹிந்து என்பதற்கான சான்றிதழ், வயது, படிப்பு, வருமான சான்றிதழ் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கோயில் செயல் அலுவலர் நாராயணி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *