கேரள உயர் நீதிமன்றம் உத்தரவுப் படி பொது இடங்களில் போர்டுகள் அகற்றம்
மூணாறு : மூணாறில் பொது இடங்களில் வைக்கப்பட்ட போர்டுகளை கேரள உயர் நீதிமன்றம் உத்தரவுபடி ஊராட்சியினர் அகற்றினர்.
கேரளாவில் பொது இடங்களில் வைக்கப்பட்ட போர்டுகள் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியது. தவிர அவற்றை வைக்கும் அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் மாதங்கள் கடந்தும் கண்டு கொள்வதில்லை.
அதனால் பல்வேறு பாதிப்புகளுக்கு வாய்ப்புள்ளதால் பொது இடங்களில் உள்ள பிளக்ஸ்
போர்டு உள்பட அனைத்து போர்டுகளையும் 15 நாட்களுக்குள் அகற்றுமாறு கேரள உயர் நீதி மன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.
அதன்படி மூணாறில் நேற்று ஊராட்சி சார்பில் போர்டுகள் அகற்றப்பட்டன. பழைய மூணாறில் ஹெட் ஒர்க்ஸ் அணை முதல் நகரில் பெரியவாரை ஜீப் ஸ்டாண்ட் வரையிலும், காலனி ரோட்டிலும் வைக்கப்பட்டிருந்த போர்டுகளை ஊராட்சி ஊழியர்கள் அகற்றினர்.