தேசிய மின் சிக்கன வார விழிப்புணர்வு ஊர்வலம்
தேனி : தேனி கோட்ட மின்வாரிய சார்பில், தேசிய மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு ஊர்வலம் மேற்பார்வை பொறியாளர் லட்சுமி, தேனி டவுன் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி முன்னிலையில் நடந்தது. செயற்பொறியாளர் (பொது) ரமேஷ்குமார், தேனி சப்டிவிஷன் செயற்பொறியாளர் பிரகலாதன், உதவிப் பொறியாளர்கள், பணியாளர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஊர்வலம் தேனி பங்களாமேட்டில் துவங்கிய நேருசிலை வந்து பெரியகுளம் ரோட்டில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கி அருகே நிறைவடைந்தது.
முன்னதாக ஊர்வலத்தில் மேற்பார்வை பொறியாளர் பேசுகையில், திறன்மிக்க மின் சாதனங்களை தேர்வு செய்து, நன்கு பராமரித்து மின் செலவை குறைக்க வேண்டும். தேவையில்லாத இடத்தில் மின்சார பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். நட்சத்திர குறியீடுகள் கொண்ட மின் உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். மின்மோட்டார்களுக்கு ஐ.எஸ்.ஐ., முத்திரையிட்ட கெபாசிட்டர்களைபயன்படுத்த வேண்டும். பிரிட்ஜ்களை கதவுகளை அடிக்கடி திறப்பதை தவிர்த்து மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என்றார். உதவிப் பொறியளர் பிரபு நன்றி தெரிவித்தார்.