ரூ.12 கோடியில் திட்ட மதிப்பீடு அரசுக்கு.. . பரிந்துரைl சேதமடைந்த தெருக்களை சீரமைக்க கோரிக்கை
இப்பேரூராட்சியில் சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, கொண்டமநாயக்கன்பட்டி ஆகியபகுதிகள் உட்பட விரிவாக்கப் பகுதிகளிலும்18 வார்டுகள்உள்ளன.30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தினமும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதிக்கு, பல்வேறு காரணங்களுக்காகவந்து செல்கின்றனர்
மத்திய அரசின்,’அம்ருத்’திட்டத்தின் கீழ் ஆண்டிபட்டி பேரூராட்சியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் கடந்த பல மாதங்களாக நடந்து வருகின்றன.குழாய் பதிப்பில் தரமான நிலையில் இருந்த சிமென்ட் ரோடு, பேவர் பிளாக், தார் ரோடுகளில் பள்ளம் தோண்டி குழாய் பதிக்கப்பட்டுள்ளது. பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை என்பதை காரணம் காட்டி சேதம் அடைந்த பகுதிகளை சீரமைக்காமல் குண்டும் குழியுமாக விட்டு சென்றுள்ளனர்
பல இடங்களில் கற்கள் பெயர்ந்து வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் நீடிக்கிறது. மேலும்நடந்து செல்பவர்களுக்கும் பாதிப்புஏற்படுகிறது.கடந்த ஓராண்டுக்கும்மேலாகியும் பல இடங்களில்ரோட்டை சீரமைப்பதற்கானஎந்த நடவடிக்கையும்மேற்கொள்ளவில்லை.
பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: அனைத்து வார்டுகளிலும் சிமென்ட் ரோடு, பேவர்பிளாக், தார்ரோடு குழாய் பதிக்கும் பணிகள் நடக்கின்றன.பேரூராட்சியில் தேவையான பல இடங்களிலும் சர்வே செய்யப்பட்டு ரூ.12 கோடி மதிப்பில் ரோடுகள் அமைக்க அரசுக்கு திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது.
அரசு மூலம் நிதி கிடைத்ததும்,புதிய ரோடுகள் அமைக்கவும், சேதமான ரோடுகளை சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.’, என்றனர்.