பெண் பலாத்கார முயற்சி பெயிண்டர் மீது வழக்கு
ஆண்டிபட்டி, ஜன. 12: ஆண்டிபட்டி அருகே உள்ள கிராமத்தில் 30 வயதான பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தனது தாயாருடன் வசித்து வந்தார். இந்நிலையில், அதே ஊரில் பெயிண்டிங் வேலைக்காக வந்திருந்த தெப்பம்பட்டியை சேர்ந்த பிச்சைமணி என்பவர், வீட்டில் தனியாக இருந்த அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அவரின் உறவினர்கள் அங்கு வந்தனர். பிச்சைமணி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரில் ராஜதானி போலீசார், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடந்த பிச்சைமணி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.