கவுமாரியம்மன் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கி ஜூலை 17 வரை பத்து நாட்கள் திருவிழா நடக்கும். ஜூலை 16ல் மாவிளக்கு, ஜூலை 17ல் அக்னிசட்டி, ஜூலை 23ல் மறுபூஜை நடக்கிறது. தினமும் இரவில் அம்மன் சிம்மம், ரிஷபம், அன்னபட்ஷி, குதிரை, யானை, மின்விளக்கு, பூப்பல்லாக்கு அலங்காரத்தில் வீதி உலா செல்வார். கொடியேற்றும் விழாவில் தென்கரை வர்த்தக சங்க தலைவர் சிதம்பரசூரியவேலு, செயலாளர் சீத்தாராமன், பொருளாளர் அன்னகாமு மற்றும் ஜோதிசாமி, ரவீந்திரபாண்டியன், பொன்னுத்துரை, அய்யாச்சாமி, செயல் அலுவலர் சுந்தரி உட்பட பலர் பங்கேற்றனர். நேற்று முதல் ஜூலை 17 வரை தினமும் காலை 8:00 மணிக்கு உற்சவர் அம்மனுக்கு கோயில் அலுவலகம் மண்டபத்தில் உபயதாரர்கள் நடத்தும் திருக்கண் அபிஷேகம் நடக்கிறது. திருவிழா ஜூலை 17 வரை, பெருமாள் கோயில் முதல் மூன்றாந்தல் வரை 400 மீட்டர் தூரத்திற்கு டூவீலர்கள் மட்டும் அனுமதித்து, ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்கு ‘பேரிகாட்’ அமைத்து போலீசார் தடை ஏற்படுத்தியுள்ளனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.