தேனி மாவட்ட கோர்ட்டில் பொங்கல் விழா
தேனி, ஜன. 12: தேனி அருகே லட்சுமிபுரத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் உள்ளன. இந்நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா தேனி வக்கீல்கள் சங்கங்கங்களின் சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள் முத்துராமலிங்கம், சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தனர். செல்வன், செல்வக்குமார் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சொர்னம் நடராஜன், மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணக்குமார்,
குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சரவணன், பிசிஆர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனுராதா, போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கணேசன், கூடுதல் அமர்வு நீதிபதி கோபிநாத், சார்பு நீதிபதி கீதா, குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜெயமணி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். இதில் புதுப்பானை வைத்து புத்தரிசி இட்டு, சர்க்கரை பொங்கல் வைத்தும், காளைமாடுக்கு பொட்டுவைத்தும் கொண்டாடினர். இதனையடுத்து, வக்கீல்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் வக்கீல்கள் ஜெயபாரதி, பாண்டிமணி, ஹரிஹரசுதன், மல்லீஸ்வரன், காண்டீபன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.