தபாலில் வந்த கடன் தொகை
மூணாறு: கேரள மாநிலம் மூணாறில் பலசரக்கு கடை ஒன்றுக்கு தபாலில் கவர் வந்தது. அதனை பிரித்துப் பார்த்த உரிமையாளர் அதில் ரூ.ஆயிரத்துடன் இருந்த கடிதத்தை பார்த்தார்.
அக்கடிதத்தில், ‘தங்களின் கடையில் சில ஆண்டுகளுக்கு முன் பொருட்கள் வாங்கிய வகையில் ரூ.450 கடன் உள்ளது. ‘கடனை திரும்ப செலுத்த வில்லை என்றால், சொர்க்கத்தில் இடம் இல்லை’ என பைபிளில் கூறப்பட்டுள்ள வாசகத்தை படித்தேன்.
ஆதலால் கடனை அனுப்பி உள்ளேன். காலதாமதத்திற்கு மன்னிக்கவும்’ என எழுதப்பட்டு பெயர், முகவரி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
கடிதத்தையும், ரூபாயையும் பார்த்த உரிமையாளர் கடன் பெற்ற நபர் குறித்து எவ்வித தகவலும் இல்லாததால் அதில் வந்த ரூ.ஆயிரத்தை மூணாறு சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியலில் செலுத்த முடிவு செய்தார்.