தேயிலை தோட்டத்தினுள் இறந்து கிடந்த புலி
மூணாறு : மூணாறு அருகே பத்து வயது மதிக்கதக்க புலி தேயிலை தோட்டத்தினுள் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது.
மூணாறு அருகே கூடாரவிளை எஸ்டேட் சைலன்ட்வாலி டிவிஷனில் தேயிலை தோட்ட எண் 23 க்கு நேற்று தொழிலாளர்கள் பணிக்கு சென்றனர். அங்கு தேயிலை தோட்டத்தினுள் உடல் அழுகிய நிலையில் புலி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்
தேவிகுளம் வனத்துறை அதிகாரி வெஜி சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினார்.
புலி வயது முதிர்வு காரணமாக இறந்திருக்க கூடும் என தெரிவித்தார். இன்று பிரேத பரிசோதனை நடக்க உள்ளதால், அதில் புலி இறந்ததற்கான காரணம் தெரியவரும்.