புலி தாக்கி இரண்டு பசுக்கள் பலி: சோகத்தில் குடும்பத்தினர்
மூணாறு : மூணாறு அருகே புலி தாக்கி, 2 பசுக்கள் பலியான நிலையில் ஒரு பசு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறது.
இவரது மூன்று பசுக்கள் நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்றன. அவை மாலையில் வீடு திரும்பாததால், அவற்றை தேடியபோது மாட்டுபட்டி எஸ்டேட் கொரண்டிக்காடு டிவிஷனில் தேயிலை தோட்ட எண் 22ல் 2 பசுக்கள் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தன. ஒரு பசு பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது.
அவற்றை புலி தாக்கியதாக தெரிய வந்த நிலையில், அதனை வனத்துறையினர் உறுதி செய்தனர்.
பாலனின் குடும்பத்தினருக்கு வாழ்வாதாராக இருந்த பசுக்களில் 2 பலியான நிலையில், ஒரு பசு உயிருக்கு போராடி வருவதால், அவரது குடும்பத்தினர் சோகம் அடைந்தனர்.