‘நீட்’ தேர்வு பயிற்சிக்கு 40 மாணவர்கள் தேர்வு
தேனி; மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் சிலரை தேர்வு செய்து நீட் தேர்விற்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்காக 8 வட்டாரங்களிலும் தலா 5 மாணவர்கள் தேர்வு செய்யும் பணியை கல்வித் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் 40 மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.