Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

போலியாக கையெழுத்திட்டு 19.55 ஏக்கர் நிலம் மோசடி; ஒன்பது பேர் மீது வழக்கு

தேனி; தேனியில் போலியாக கையெழுத்திட்டு 19.55 ஏக்கர் நிலத்தை மோசடி செய்த 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிவகங்கை வைத்தியலிங்கம் மகன் ராமகிருஷ்னண்.

ரியல் எஸ்டேட் உரிமையாளர். 1995ல் தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தில் 47 ஏக்கர் 11 சென்ட் நிலம் வாங்கினார். இதை வீட்டடி மனைகளாக மாற்றி விற்பனை செய்ய உறவினர் ஜெகநாதனுக்கு அதிகாரம்கொடுத்தார்.

ஜெகநாதன் இறந்துவிட்டதால் நிலத்தை மதுரை கே.புதுார் மகாலட்சுமி நகர் வைஜெயந்திமாலா, அவரது மகன் வெங்கடேசன், அதே பகுதியை சேர்ந்த பிரபு பாதுகாத்து வந்தனர்.

அந்த நிலத்தை அபகரிக்க நினைத்து சிவகங்கை திருப்பத்துார் தாலுகா மற்றொரு வைத்திலிங்கம் மகன் ராமகிருஷ்ணனை கண்டறிந்தனர்.

இவரை வைத்து 2010ல் போலியாக கையெழுத்திட்டு 19 ஏக்கர் 55 சென்ட் நிலத்தை சிவகாசி கணேஷ்குமார், தேனி கெங்குவார்பட்டி முருகன், தென்கரை ராஜேந்திரன், பெரியகுளம் ராமசாமி, ஜெயமங்கலம் மணிகண்டனுக்கு பவர் கொடுத்தனர்.

இது தொடர்பாக வைஜெயந்திமாலா, வெங்கடேசன், பிரபுவிடம் சிவகங்கை ராமகிருஷ்ணன் கேட்டார்.

அவர்கள் கொலைமிரட்டல் விடுத்தனர். ராமகிருஷ்ணன் தேனி எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.

போலி கையெழுத்திட்ட ராமகிருஷ்ணன், நிலத்தை பாதுகாத்து ஏமாற்றியவர்கள், பவர் வாங்கியவர்கள் என 9 பேர் மீதும் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *