பெண்ணுக்கு மிரட்டல் இருவர் மீது வழக்கு
பெரியகுளம் : பெரியகுளம் தென்கரை பாரதிநகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி அம்முபிரியா 38. இருவருக்கும் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிய நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இரு ஆண்டுகளாக தனியாக குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் சத்தியபிரகாஷிடம் அம்முபிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகினர்.
சத்தியபிரகாஷின் மனைவி சிந்து, சத்தியபிரகாஷின் தம்பி விஜயபிரகாஷ் ஆகியோர்,அம்முபிரியாவிடம் அலைபேசியில் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.
அம்முபிரியா புகாரில் தென்கரை எஸ்.ஐ., ஜீவானந்தம் வழக்கு பதிந்து இருவரிடம் விசாரணை செய்து வருகிறார்.–