Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

தேனியில் இருந்து சென்னைக்கு இன்று கூடுதல் பஸ்கள் இயக்கம் முன்பதிவு செய்ய அறிவுறுத்தல்

தேனி: தேனியில் இருந்து சென்னைக்கு இன்று கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள போக்குவரத்து துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் கம்பம், குமுளி, போடி பகுதிகளில் இருந்து அரசு விரைவுப்போக்குவரத்துகழகம் மூலம் 20 க்கும் மேற்பட்ட பஸ்கள் சென்னை, பெங்களூரு நகரங்களுக்கு தினமும் இயக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தேனியில் இருந்து சென்னை செல்ல கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்ற

இந்த பஸ்களில் பயணிக்க இருக்கை வசதி, சாயும் இருக்கை வசதி, படுக்கை வசதி, ஏ.சி., வசதி கொண்ட அரசு பஸ்களில் பயணிக்க www.tnstc.in என்ற இணைய முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பஸ் கட்டணமாக குறைந்தபட்சம் ரூ. 442 முதல் அதிகபட்சம் ரூ.750 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், பண்டிகை முடிந்து சென்னை செல்பவர்களுக்காக ஜன.,17 முதல் தினமும் 16 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டு வருகிறது. இருதினங்களில் 2ஆயிரம் பேர் அரசு பஸ் சேவையை பயன்படுத்தி உள்ளனர். இன்றும் 16 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பயணிகளின் வருகையைக்கு ஏற்ப இயக்க 22 பஸ்கள் தயார் நிலையில் உள்ளன. பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *