தமிழக கோ-கோ அணிக்கு தேனி மாணவி தேர்வு
தேனி: இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழும மாநில அளவிலான போட்டிகள் தென்காசியில் நடந்தது. இதில் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் கோ- கோ போட்டியில் தேனி அணிபங்கேற்றது.
இந்த அணியில் இடம் பெற்றிருந்த தேனி பி.சி., கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கவுசிகா தமிழக அணிக்கு தேர்வானார். தேர்வான மாணவியை பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெமில்லா, பள்ளி நிர்வாகி மேரி ப்ளோரா,ஆசிரியைகள் பாராட்டினர்.